விமர்சனம்: ரசிகர்களை வைத்து செய்த செய்!

இயக்குநர் ராஜ்பாபு இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நகுல் நடித்திருக்கும் செய் படம் ரசிகர்களை நன்றாக வைத்து செய்துள்ளது.

ஹாலிவுட் படத்தை காப்பியடித்து ஒரே கதை கொண்டு உருவான அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படங்களை தொடர்ந்து அதே படக்கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்ட மற்றொரு படம் தான் இந்த செய். ஆனால், இதில் நகுல் போலீஸ் இல்லை என்பது மட்டுமே ஆறுதல்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்த நகுலுக்கு பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்றே இந்த செய் படம் சொல்லியுள்ளது.

ராஜ்பாபு இயக்கியுள்ள இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் முஞ்சால் என்ற புதுமுக நாயகி நடித்துள்ளார். ஆனால், படத்தில் இருவரும் இறுதி வரை பார்க்காமலே காதல் கோட்டை காதலை செய்கின்றனர். ஆனால், கிளைமேக்ஸிலும் பார்க்கவில்லை என்பது தான் இப்படத்தில் மாற்றம் செய்யப்பட்ட திரைக் கதை.

ஹீரோவாக ஆசைப் படும் நாயகன் என ரெமோ படத்தில் இருந்து காட்சிகளை சுட்டு இந்த படத்தில் வைத்துள்ளார் இயக்குநர். என்னய்யா, அட்லியை ஓவர்டேக் செய்துவிடுவீர் போல என ஆடியன்ஸ் உரத்த குரலில் கத்து கின்றனர். அஜித் ரசிகர்களாக இருப்பார்கள் போல.

தானம் செய்யும் உடலை திருடும் கும்பலில் ஹீரோவாக ஆசைப்படும் நகுல் தனது ஆம்புலன்ஸ் ஓட்டும் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால், ஆம்புலன்ஸ் ஓட்ட முற்பட இந்த சூழ்ச்சி வலைக்குள் எப்படி சிக்குகிறார் என்பதும் அதிலிருந்து மீண்டாரா இல்லை என்பதுமே படத்தின் கதை.

பிரகாஷ் ராஜ், நாசர் நட்புக்காக நடித்து கொடுத்துள்ளனர். போனில் மட்டுமே நாயகியின் போட்டோவை பார்த்து நகுல் காதலிப்பதெல்லாம் டூ மச். பாடல்களில் மட்டும் இருவரும் ஒன்றாக டூயட் பாடுகின்றனர். ஆனால், எந்த பாடலும் கேட்கும் படியோ ரசிக்கும் படியோ இல்லை. நிக்ஸ் லோபஸ் கடமைக்கு என இசையமைத்து உள்ளார்.

விஜய் உலகநாத்தின் கேமரா காடுகளையும், மேடுகளையும் அழகாக காட்சிப்படுத்துகின்றன. மொத்தத்தில் செய் நன்றாக செய்யாத உப்புமா.

செய் ரேட்டிங்: 1.25/5.

More News >>