வெல்வெட் நகரம் டிரைலரில் அதிமுக அரசை விளாசும் வரலட்சுமி சரத்குமார்?
இந்த ஆண்டு வரிசைக் கட்டி பல படங்களில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி லீடு ரோலில் நடித்துள்ள வெல்வெட் நகரம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.
டிரைலரின் தொடக்கத்தில் குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தை வேறு ஒரு இடத்தின் பெயர் கூறி, அது தானாக நடக்கவில்லை. இந்த அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சதி எனக் கூறி வரலட்சுமி டிரைலரை தொடங்கும் இடமே அதிமுக அரசை விமர்சிப்பதாக அமைந்துள்ளது.
பெண் பத்திரிகை நிருபராக வரலட்சுமி ஸ்டைலாகவும், அதே சமயம் போல்ட்டாகவும் நடித்துள்ளார். வில்லன் ஆட்கள் இவரை அடிக்கும் இடத்தில் எல்லாம் நமக்கே அள்ளு விடுகிறது. ரமேஷ் திலக், அர்ஜை, சந்தோஷ் கிருஷ்ணா, குக்கூ நாயகி மாளவிகா சுந்தர், பிரகாஷ் ராகவன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். பகத் குமார் ஒளிப்பதிவில், ஸ்டண்ட் சீன்கள் வேற லெவலில் படமாக்கப்பட்டுள்ளன.