புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளாததால், நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் கரையை கடந்த பத்து நாட்கள் ஆகியும், பல மாவட்டங்கள் இன்னும் பாதிப்பில் இருந்து மீளா துயரத்தில் தான் உள்ளன. குறிப்பாக, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், 40 சதவீதம் சீரமைப்பு பணி தான் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையும், தேர்வுகள் ரத்தும் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, கஜா புயல் பாதிப்பு எதிரொலியால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.