மோடி தாழ்ந்த சாதியில் பிறந்தவர் இந்துத்துவம் பற்றி பேச தகுதி இல்லை!- காங். தலைவர் பேச்சு

ராஜஸ்தானில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சித் தலைவர் சி.பி. ஜோஷி, 'பிரதமர் மோடி, உமாபாரதி, சாமியார் சாத்வி ரிதம்பரா ஆகியோர் தாழ்ந்த சாதியில் பிறந்தவர்கள். இவர்களுக்கு இந்துத்துவத்தை பற்றி பேச தகுதி கிடையாது.

பிராமணர்கள் போன்ற உயர் வகுப்பினருக்குத்தான் இந்துத்துவம் பற்றி பேச தகுதி உள்ளது' என்று பேசினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி,  சி.பி.ஜோஷியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், தன் பேச்சுக்கு ஜோஷி வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஜோஷி பிரதமர் மோடியின் சாதி குறித்த பேச்சுக்கு  மன்னிப்பு கேட்டாலும், பாரதிய ஜனதா கட்சி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்திடம் ஜோஷியின் பேச்சு குறித்து புகார் அளித்தது.

பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநில பிரிவு தேர்தல் ஒருங்கிணைப்பாளர் நாகர்சிங் மகேஷ்வரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில்.' தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் பற்றி பேசுவது தேர்தல் ஆணையத்தில் விதிகளுக்கு புறம்பானது. ஜோஷியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து. ராஜஸ்தான் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஆனந்த் குமார், சி.பி. ஜோஷி நாளைக்குள் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'ஜோஷியின் பேச்சு, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்திய கலாசாரம், இந்துத்துவத்தை பற்றி அறியாதவர்கள் என்பதை காட்டுகிறது' என்றுடெல்லி பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்ஸ் திரிவேதி கூறியுள்ளார்.

More News >>