நாகை, திருவாரூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நாகை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் அதிகளவில் உள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் முழுமையாக பணிகள் முடியவில்லை என்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
நாகை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.