பொங்கலுக்கு பேட்ட கன்ஃபார்ம்: கார்த்திக் சுப்பராஜ் அதிரடி ட்வீட்!
ரஜினியின் பேட்ட படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக எழுந்த வதந்திகளுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 9ம் தேதி பேட்ட படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று ட்வீட் ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார்.
அதில், பேட்ட படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிசம்பர் 3ம் தேதி ரிலீசாகிறது என்றும், டிசம்பர் 7ம் தேதி 2ம் சிங்கிள் பாடல் ரிலீஸ் என்றும் 9ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா என்றும் போட்டிருந்தார். ஆனால், அதில், பேட்ட பொங்கல் என எந்த ஹேஷ்டேகும் இல்லாததால், பொங்கலுக்கு பேட்ட படம் ரிலீஸ் ஆகவில்லை. விஸ்வாசத்திற்கு பேட்ட வழிவிட்டது என செய்திகள் மற்றும் வதந்திகள் பரவ தொடங்கின.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த ட்வீட்டில், #PettaPongal2019 சேர்க்க மறந்துவிட்டேன் என கார்த்திக் சுப்பராஜ் போட்ட நிலையில், ரஜினி ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் இணைந்து கொண்டு தல ரசிகர்களுடன் ட்விட்டர் போர் நடத்தி வருகின்றனர்.