சோஷியல் நெட்வொர்க்கே தேவையில்லை பயந்தோடிய பார்வதி!
மலையாளத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த பார்வதி ஷோஷியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளார்.மலையாளத்தில் முன்னணி நடிகை, தமிழில் பூ, மரியான் போன்ற படங்களில் நடித்த பார்வதி மேனன், மம்மூட்டியின் கசாபா படத்திற்கு கடுமையாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து தனது மார்க்கெட்டுக்கு மூடு விழா நடத்தினார்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. அறிவிக்கப்படாத ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. மேலும், நடிகர் திலீப் விஷயத்தில் மோகன்லாலை பகைத்துக் கொண்டார். சபரிமலை தீர்ப்பை வரவேற்றார். மீடூவுக்கு ஆதரவு கொடுத்தார்.
மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலை இளம் வயது நாயகி பகைத்துக் கொண்டால், அவரது ரசிகர்கள் சும்மா விடுவார்களா? ஆபாச கமெண்டுகள், வக்கிரமான மார்பிங் புகைப்படங்களை பதிவிட்டு அவரை நோக அடித்துள்ளனர்.
இதற்கெல்லாம் அஞ்சாமல், சட்ட ரீதியாக நடவடிக்கை ஏதும் எடுக்க தயங்கிய பார்வதி, இந்த தொல்லைகளில் இருந்து தப்பித்தால் போதும்டா சாமி என ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலிருந்தும் வெளியேறி விட்டார்.
மேலும், முன்னணி நடிகர்களிடம் மறைமுகமாக மன்னிப்பு கோரி மீண்டும் பட வாய்ப்புகளை பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.