களைகட்டி வரும் சர்வதேச காற்றாடி திருவிழா

காந்தி நகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியதை அடுத்து, படுஜோராக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் சர்வதேச காற்றாடி திருவிழா ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆண்டு தோறும் காற்றாடி திருவிழா நடைபெறும். இதற்காக தனி இடம் ஒதுக்கி உலகம் முழுவதில் இருந்தும் மக்கள் இங்கு வந்து கொண்டாடுவர்.

அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 29வது ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். உடன், கவர்னர் ஓ.பி.கோலி இருந்தார்.

இந்த காற்றாடி திருவிழா 8 நாட்களுக்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 17ம் தேதியுடன் முடிவையும்.

இந்த விழாவில், நாட்டின் 18 மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட வித்தியாசமான பட்டங்கள் பறக்கவிடப்படுகின்றன. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர். பல விதமான பட்டங்கள் இங்கு பறக்கவிடுவதால் இதை காண ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

29வது ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழாவின் காட்சி இதோ..

 

More News >>