க்யூட் பிரியா.. குறும்பு சூர்யா! மான்ஸ்டர் புகைப்படங்கள் ரிலீஸ்!
எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் மான்ஸ்டர் படத்தின் பிரத்யேக புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.
எலி தான் படத்தின் ஹீரோ என அறிவிக்கப்பட்ட நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் குறும்பு முக பாவனைகளுடனான புகைப்படங்களும், பிரியா பவானி சங்கரின் க்யூட்டான புகைப்படங்களும் படக்குழுவினரால் ரிலீஸ் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். குழந்தைகளுக்கு மட்டுமின்றி குடும்பங்களுக்கே மிகவும் பிடிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக மான்ஸ்டர் உருவாகி வருவதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.