கர்நாடக மாநிலத்தில் பயங்கர விபத்து: பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து 25 பேர் பலி
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பேருந்து பாண்டவபுரம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகே இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் பயணித்த பயணிகளில் சுமார் 25 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கிருந்த மக்கள் சிலர் கால்வாயில் குதித்து பேருந்துக்குள் இருந்த சிலரை மீட்டு அவர்களின் உயிரை காப்பாற்றினர். இவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சீகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்து இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.