மீண்டும் மீ டூ புயலை கிளப்பியுள்ளார் நேகா #MeToo
துபாயில் இருக்கும் ஒருவர் தனது மேனேஜருக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் மீ டூ மூலம் அடையாள படுத்தினார் நடிகை நேகா.
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நேகா சக்சேனா தமிழிலும் நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஒரு மெல்லிய கோடு, லொடுக்கு பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அந்த மெசேஜில் ஒரு இரவுக்கு மட்டும் வரமுடியுமா என்று அவர் கூறியதை வெளியிட்டுள்ளர்.
”அந்த நாய்க்கு பாடம் கற்பிக்க நான் இந்த மெசேஜை எல்லா மீடியாக்கும் அனுப்பியிருக்கிறேன். பெண்களிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்று அவன் குடும்பம் தெரிந்துக்கொள்ளட்டும். இதனை கூற நான் அஞ்ச மாட்டேன் ஏனெனில் நடிகை என்பதை தாண்டி நான் ஒரு பெண், என்று கூரியுள்ளார்”.
நேகா தன்னை அழைத்தவரின் முகவரியை கண்டுப்பிடித்து அதையும் வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் எல்சன் லோகிதட்சன். நேகாவின் பதிவுகளை பார்த்த எல்சன் தனது போனை யாரோ ஹேக் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த நேகா, அவர் பொய் சொல்வதாக தெரிவித்துள்ளார்.