சிக்கல் ஓவர் - என்னை நோக்கி பாயும் தோட்டா ரீலிசுக்கு ரெடி!
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீட்டு சிக்கல்கள் தீர்ந்து ரீலிசுக்கு தயாராகி உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் 2016ஆம் ஆண்டு எடுக்க தொடங்கியது. ஆனால் பல சிக்கல்கள் காரணமாக படத்தின் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டது.
படத்தின் டிரைலர் வந்து பல நாட்கள் ஆகியும் படத்தின் ரீலிசை பத்தி எந்த பேச்சும் வரவில்லை.
தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கேக்கெல்லாம் படக்குழுவினர் வெட்டினர். ஆனால், தீபாவளிக்கு சர்காருக்கு போட்டியாக இந்த படம் வெளியாகவில்லை. தனுஷ் அதற்குள் அடுத்த படமான மாரி 2வில் பிசியாகி அடுத்த மாதம் மாரி 2 வெளியாகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
இதனால், என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாகுமா? ஆகாதா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டு பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், விரைவில் படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த மாதமே தனுஷின் 2 படங்களும் ரிலீசாக இருக்கின்றதா இல்லை ஜனவரியில் இப்படம் வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.