16 நாள்கள், 7,500 கி.மீ பயணம்!nbsp ராமேஸ்வரம் வரும் ராமாயணா எக்ஸ்பிரஸ்
புது டெல்லியில் இருந்து அயோத்தி வழியாக ராமேஸ்வரம் வரும் ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே, 'ராமாயணா எக்ஸ்பிரஸ் ; என்ற பெயரில் புதிய சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய நகரங்களை, ஆன்மீகத் தளங்களை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடும் வகையில் இந்த ரயிலின் பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருந்து நவம்பர் 14- ந் தேதி புறப்பட்ட இந்த ரயிலில் 15 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. 800 பயணிகள் உள்ளனர்.
15 கோச் மேலாளர்கள், 14 பாதுகாவலர்கள், 30 உணவு சப்ளை செய்பவர்கள் , 20 சமையல்காரர்கள் இந்த ரயிலில் பணியாற்றுகிறார்கள். இந்த ரயில் 16 நாள்களில் 7 மாநிலங்கள் வழியாக 7,500 கிலோ மீட்டர் பயணித்து ராமேஸ்வரத்தை வந்தடையும். இதற்கான கட்டணம் 15,120. உணவு, தங்கும் இடங்கள் அனைத்தும் உள்ளடக்கம். இது தவிர பேருந்தில் 500 கி.மீ தொலைவு சென்று ராமர் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரை சென்று பார்வையிட ஒரு நபருக்கு ரூ. 47,600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து கொழும்பு நகருக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபாஸியாபாத்தில் இருந்து அயோத்திக்கு 10 கிலோ மீட்டர் தொலைவுதான். ஃபாஸியாபாத்தில் இந்த ரயில் 36 மணி நேரம் நிறுத்தப்படும். பயணிகள் ராமர் பிறந்த ராமர்ஜென்மபூமி உள்ளிட்ட இடங்களை பார்த்து வரலாம். டெல்லியில் இருந்து புறப்படும் ரயில் இரண்டாவது நாளே ஃபாஸியாபாத்துக்கு வந்து விடும். தொடர்ந்து நந்திதாம், ஷிதர்மைர்கி, ஜனக்பூர், பிரயாக் , ஷ்ரிங்கவர்பூர், சித்ரஹூட், ஹம்பி , நாசிக், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் மட்டுமே நிற்கும். நவம்பர் 14-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட ராமாயணா எக்பிரஸ் தற்போது மத்தியபிரதேச மாநிலம் சித்ரஹூட்டில் உள்ளது. ராமேஸ்ரம் வந்தடைய இன்னும் 6 ஆயிரம் கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது.
அயோத்தி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ராமயணா எக்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.