அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் டிச. 4 முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை.
ஆனால் தமிழக அரசு இதனை இன்னமும் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில் ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள், ஊதிய முரண்பாடு, பென்சன், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆகையால் ஜாக்டோ ஜியோவில் இடம்பெற்றுள்ள 106 சங்கங்களும் டிசம்பர் 4-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
நாகை, திருவாரூர் உள்ளிட்ட கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் வேலைநிறுத்தம் நடைபெறாது என்றார்.