நாகை, மன்னார்குடி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
புயல் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால் நாகை மற்றும் மன்னார்குடி பள்ளிகளுக்கு நாளை திங்கட்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் தாக்கத்தால் நாகை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளான குடிநீர், உணவு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் புயல் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக நாகை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேப் போல மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.