இன்றைய வானிலை: தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது.சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மழையின்றி வானிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் பருவ காற்றின் காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானலை ஆய்வு மையத்தின் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், சென்னை பொறுத்தவ¬ரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.