வீரம் 2.0 விஸ்வாசம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை இப்போதே துவக்கிவிட்டனர்.
சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக நடித்துள்ள படம் விஸ்வாசம். வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நயன்தாரா. வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து தம்பி ராமைய்யா இந்த படத்திலும் நடித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக எந்தவொரு பட புரமோஷனும் வேண்டாம் என அஜித் கூறியதாக தகவல்கள், செய்திகள் வெளியாகின. ஆனால், நேற்று விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை சத்ய ஜோதி பிலிம்ஸ் வெளியிட்டு, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.
தூக்குதுரைன்னா அடாவடி என தம்பி ராமைய்யா குரலில் அஜித்தின் இன்ட்ரோ வசனம் தெறிக்க மோஷன் போஸ்டரில் இளம் அஜித் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக இருக்கிறார். சற்று நேரத்தில், செகண்ட் லுக்கான சால்ட் அண்ட் பெப்பர் லுக் வயதான தோற்றத்திலும் வீரம் படத்தில் இருந்த அஜித்தின் 2.0 கெட்டப்பில் அஜித் தோன்றுகிறார்.
வெளியான 12 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் இந்த மோஷன் போஸ்டரை பார்த்துள்ளனர். யூடியூப் டிரெண்டிங்கிலும் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் தான் முதலிடத்தில் உள்ளது.