தளபதி 63ல் நயன்தாரா கன்ஃபார்ம்!
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் இணைந்துள்ளார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
படத்தின் பூஜை போடப்பட்ட போது, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். என முழு டெக்னிஷியன்ஸ் பட்டியலையும் வெளியிட்டார். இப்படத்தில் விவேக், யோகிபாபு காமெடியன்களாக கமீட் ஆகியுள்ளனர். ஆனால், நாயகி பெயரை மட்டும் வெளியிடவில்லை.
கீத கோவிந்தம் படத்தின் நாயகி ராஷ்மிகா பெயர் சமந்தா பெயர் அடிபட்ட நிலையில், வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா கமீட் ஆகியுள்ளார்.அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்து தளபதியின் 63வது படத்தில் கமீட் ஆகியுள்ளதை அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதனால், விஜய் ரசிகர்கள் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.
அட்லியின் ராஜா ராணி படத்தின் மூலம் தான் நயன்தாரா கம் பேக் ஆனது குறிப்பிடத்தக்கது. படத்தில் நயன்தாராவை தவிர வேறு ஹீரோயின்கள் இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ச்சனா கல்பாத்தி செய்த ட்வீட்டில், அழகாகவும், கம்பீரமாகவும், கதையை தாங்கி பிடிக்கும் வலுவான கதாபாத்திரம் கொண்ட கேரக்டரில் நயன்தாராவை தவிர யாரு நடிக்க முடியும் என தளபதி 63 நாயகியை அறிமுகம் செய்தார். இதனால், படத்தில் விஜய்க்கு இணையாக நயன்தாரா ரோலும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் 2019 தீபாவளியின் தளபதி தீபாவளிதான்.