மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி காலமானார்
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
இயக்குனர் சிகரம் என்று சினிமா உலகில் அழைக்கப்படுபவர் கே.பாலசந்தர். ரஜினி, கமல் உள்பட பல முன்னனி நடிகர்களுக்கு ஆசானாக இருந்தவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த கே.பாலச்சந்தர் தனது 84வது வயதில் 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மரணமடைந்தார். இவரது மரணம், சினிமா உலகிற்கே பேரிழப்பாக அமைந்தது.
கே.பாலச்சந்தரின் மனைவி ராஜம் கடந்த சில நாட்களால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.