ஜெயிச்சவன் சொன்னா தான் உலகம் கேட்கும் மிரட்டும் கனா டிரைலர்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்திகேயன். இவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சிவாவின் நெருங்கிய நண்பரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளர்.

சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 34 லட்சத்திற்கும் மேல் பார்வைகள் பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட டிரைலர் வைரலாகி வருகிறது.

”உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது.. ஜெயிச்சவன் சொன்னாதான் கேட்கும்” மற்றும் “நீ தோத்துடுவேன்னு யாராச்சும் சொன்னா நீ அவனை கேட்க கூடாது.. உன்னை கேட்கணும்”னு சிவகார்த்திகேயன் சொல்லும் பூஸ்ட் அப் பன்ச்கள் பலரது வாழ்க்கைக்கும் இன்ஸ்பிரேஷனாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>