சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர திட்டம்- ஐகோர்ட்டில் பொன். மாணிக்கவேல் பரபர புகார்
சிபிசிஐடி போலீசார் தம் மீது வழக்கு தொடர் திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர்நீதிமன்றத்துக்கு தெரியாமல் பொன். மாணிக்கவேல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் விவகாரத்தை தீவிரமாக கையாண்டு வருகிறார் பொன். மாணிக்கவேல். முக்கிய பிரமுகர்கள் சிலர் மீதும் பொன். மாணிக்கவேல் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் இன்று பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், சிபிசிஐடி போலீசார் தம் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர். சிலை கடத்தல் விவகாரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு எதிரான அனைத்து ஆவணங்கள் தம்மிடம் இருக்கின்றன என கூறியிருந்தார்.
இதையடுத்து தங்களுக்கு தெரியாமல் பொன். மாணிக்கவேல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.