பாலியல் புகார்: கேரள சிபிஎம் எம்எல்ஏ .சசி கட்சியில் இருந்து சஸ்பென்ட்!

கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பி.கே.சசி மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து அவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோரனூர் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பி.கே.சசி. இவர் மீது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெண் உறுப்பினர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். புகாருடன், ஆடியோ பதிவுகள் உள்பட ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.

அதுமட்டுமின்றி, கட்சியின் முக்கிய தலைவர்களான பிருந்தா கரத் உள்பட கட்சியின் தேசிய தலைவர்களுக்கும் அவர் புகார் அனுப்பினார். புகாரை ஏற்றுக் கொண்ட தலைமை, இதுகுறித்து விசாரணை நடத்த அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் எம்.பி பி.கே.ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் எம்எல்ஏ பி.கே.சசி பாலியல் ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என்றும் பெண்ணிடம் தவறாக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இதையடுத்து, எம்எல்ஏ சசியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து கேரள மாநில தலைமை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

More News >>