மாரி 2 படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைச்சாச்சு!
தனுஷின் மாரி 2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்உ யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள மாரி 2 படம் டிசம்பரில் ரிலீசாகவுள்ளது. படத்தினை தணிக்கை செய்த சென்சார் போர்டு, படத்தில் வரும் சில ஆபாச வார்த்தைகளுக்கு மியூட் கொடுத்து, படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் என பல நட்சத்திரங்கள் படத்தில் இணைந்துள்ளனர். முதல் பாகம் பெரிய ஹிட் அடிக்காத நிலையில், இரண்டாம் பாகத்தை வித்தியாசமாக எடுத்துள்ளதாக இயக்குநர் பாலாஜி மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என நடிகர் தனுஷ் தற்போது ட்வீட் செய்துள்ளார்.