தாத்தா மறைவு, கஜா புயல் சோகம்...பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த உதயநிதி ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவாலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீளா துயரத்தில் இருப்பதாலும் தனது பிறந்தநாளை விழாவாக கொண்டாடமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணிகள் செய்யும்படி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 7ந் தேதி காலமானார். அவரின் மறைவால் அவரது பேரனாகிய உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதே போன்று தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலினாலும் மக்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நற்பணிகளை மேற்கொள்ளுமாறு தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.