சிம்பு படத்தில் நடிக்கிறாரா மகேஷ் பாபு?
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ளாரா? இல்லையா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு போட்டியாக வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவுடன் நடிகர் மகேஷ் பாபு அமர்ந்து பேசும் புகைப்படம் வெளியானது.
இந்த படத்தில் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் வருகிறாரா அல்லது நட்பு ரீதியில் சிம்புவை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமா என்பதை படக்குழு விளக்காமல் யூகத்திற்கு விட்டுள்ளது.
இதனால், சிம்பு ரசிகர்கள் குழப்பம் மற்றும் சந்தோஷத்தில் உள்ளனர்.