ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான்-ஈராக் எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈரான் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல் இ சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதன் உணர்வு கடுமையாக தெரிந்தது. இதன்எதிரொலியால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.

பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதில், சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள கலார் என்ற பகுதியில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலி என்றும் 43 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More News >>