விசா விதிமீறியதாக அமெரிக்க பெண் தொழிலதிபர் சிறை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

புதுடெல்லி: புதுச்சேரியில் விசா விதிமீறல் புகார் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பெண் தொழிலதிப¬ர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க பெண் தொழிலதிபர் காசா எலிசபெத் வண்டே (48). இவர், பலமுறை வந்து செல்வதற்கான வர்த்தக விசா அடிப்படையில், இந்தியாவில் தங்கி வருகிறார். மேலும், காசா புதுச்சேரியில் சிற்றுண்டி விடுதி மற்றும் சிறிய துண்க்கடை ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த காசா கடந்த 5ம் தேதி குவைத் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, காசாவை சோதனை செய்து விசாரித்ததில், அவரது பெயர் கருப்புப் பட்டியலில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக அங்கேயே சிறை வைத்தனர். பின்னர் அதே நாளில் அவரை விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியில் ஒரு தொண்டு நிறுவன பணிகளில் காசா ஈடுபட்டுதால், விசா விதிமீறலின் அடிப்படையில் அவரது பெயர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் காசாவை திருப்பி அனுப்ப தடை விதிக்குமாறு காசாவின் வக்கீல் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளான முரளிதர் ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், விசா விதிமீறல் தொடர்பாக தான் அவர் சிறை வைக்கப்பட்டு பின்னர் அவரை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் திரும்பி சென்றபிறகு அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

More News >>