மாரி 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?
தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி என்ற ரொமான்ஸ் பாடல் வரும் நவம்பர் 28ம் தேதி ரிலீசாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் நடித்துள்ள மாரி 2 படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. தணிக்கை சான்று பெற்ற கையோடு, படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி எனத் தொடங்கும் பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ரவுடி பேபி பாடல் வரும் நவம்பர் 28ம் தேதி ரிலீசாகிறது. மாமனார் ரஜினியின் 2.0 நவம்பர் 29ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், தனுஷின் ரவுடி பேபி பாடல் 28ம் தேதியே வெளியாவது குறிப்பிடத்தக்கது.