திருவாரூர் கஜா புயல் நிவாரண முகாமில் உடல்நலக் குறைவால் பெண் பலி
திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த திருத்துறைப்பூண்டி வேதநாயகி(வயது 37) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
கஜா புயல் சூறையாடி 12 நாட்களாகிவிட்டது. இன்னமும் டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.
பெரும்பாலான மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்கி உள்ளனர். இந்த முகாம்களில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
இதனிடையே திருவாரூர் அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த திருத்துறைப்பூண்டி வேதநாயகி என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.