மலேசிய பெடரல் கோர்ட்டின் முதல் இந்திய பெண் நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன்
மலேசிய பெடரல் நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.மலேசியாவின் பெடரல் நீதிமன்றத்துக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக 9 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் டத்தோ நளினி பத்மநாபனும் ஒருவர்.
மலேசியா வரலாற்றில் இத்தகைய உயர் பதவியை வகிக்கும் முதலாவது இந்திய பெண்மணி டத்தோ நளினி பத்மநாபன்.
பதவி உயர்வு பெற்ற 9 நீதிபதிகளும் துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரிம் ஷாலிடம் நியமன கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.