பிங்க் படத்தில் அஜித் - தயாரிப்பாளர் கன்பார்ம்!
அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், தான் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகின.
ஆனால், அது இதுவரை உறுதியாகவில்லை என வினோத் அறிவித்திருந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற படவிழாவில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த போனி கபூர், பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளார் என்றும், படத்திற்கான ப்ரீ புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு காட்சிகள் இந்த படத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானிடம் பேச்சுவார்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.