அரியலூரில் அவலம்: சேற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவர்களின் பரிதாப நிலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்இ மாணவர்கள் மண்ணும், சேறுமாக உள்ள சாலையை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் அண்ணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பளயபாடி கிராத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு செல்லும் வழி மண் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியில் தான் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பெய்த கனமழையால், மண் சாலை தற்போது சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாணவர்கள் இந்த சேற்றில் விழுந்து எழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இதனால், மண் சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

More News >>