கூட்டணி குழப்பம்... ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு
உடையும் திமுக கூட்டணி- வைகோவுக்கு நோஸ்கட் கொடுத்த ஸ்டாலின்! எடப்பாடி பக்கம் தாவும் திருமாவளவன்! Exclusive
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து சர்ச்சையாகி உள்ள நிலையில் இன்று மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் டெல்லியில் திருமாவளவன் சந்தித்து பேசியிருந்தார்.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ‘மக்களின் முதல்வர்’ என பாராட்டுப் பத்திரம் வாசித்தார் திருமாவளவன்.
அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன்... கொங்கு அமைச்சர்களிடம் குதூகலித்த எடப்பாடி- Exclusive
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிவித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை திருமாவளவன் நேற்று சந்தித்து பேசியிருந்தார். இதனால் திருமாவளவன் அணி மாறுவது உறுதி என கூறப்பட்டது.
வடதமிழகத்தில் பாமகவுக்கு செக்- கை கோர்க்கும் திருமாவளவன், வேல்முருகன்?
தற்போது திடீரென அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். ஆனால் இச்சந்திப்பில் திருமாவளவன் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை ஸ்டாலின் காட்டிக்கொள்ளவில்லை.
திருமாவளவனைக் கழட்டிவிட்டால் போதும் - கூட்டணியைக் கெடுக்கும் திமுக உடன்பிறப்புகள் EXCLUSIVE
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவுடன் தோழமை தொடருவதாகவும் அது கூட்டணியாக மாற விரும்புவதாகவும் தெரிவித்தார்.