காவிரியின் குறுக்கே மேகதாது அணை- கர்நாடகா வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு. ஆனால் மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த அணையை கட்டினால் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என்பது தமிழகத்தின் கருத்து. இந்த நிலையில் மேகதாது அணையை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு கர்நாடகா அரசு அனுப்பி வைத்தது.
தற்போது இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சச்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.