காதலியை மணந்த ஜாக்கிசான் மகள்!
நடிகர் ஜாக்கிசானின் மகள் தனது காதலியை ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளார். திருமண சான்றிதழ் புகைப்படத்தை இணையத்திலும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஜாக்கிசானை பிடிக்காத ஆளே இல்லை. சண்டைக் காட்சிகளிலும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழச் செய்த ஜாக்கிசானின் குடும்ப வாழ்க்கை பல சோக கதைகளை கொண்டதாக அமைந்துள்ளது.
ஜாக்கி சானின் மகன் போதைப் பொருள் ஆசாமியாக மாறிய நிலையில், அவரை வீட்டை விட்டு ஜாக்கிசான் வெளியேற்றினார். அடுத்ததாக ஓரினச் சேர்க்கை கொண்ட தனது மகளையும் வெளியேற்றினார்.
சமீபத்தில் அவர், ஒரு குழாய்க்குள் வாழ்க்கை நடத்துவதாக வெளியான புகைப்படம் அவரை மேலும் நிலை குலைய செய்தது.
இந்நிலையில், தற்போது, ஜாக்கிசானின் 19வயது மகள் எட்டாநக், கன்னடாவை சேர்ந்த 31வயது அட்டுனம் என்ற பெண்ணை ஓரினச் சேர்க்கை திருமணம் செய்துள்ளார்.
கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் அவருடன் சேர்ந்து இருப்பது போல போட்டோ ஒன்றை பதிவு செய்தார் எட்டானக். மேலும் அவரை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.
இவர்கள் கன்னடாவில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக் கொண்டனர். மேலும் திருமண சான்றிதழுடன் எடுத்த புகைப்படத்தை இப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் எட்டாநக்.
இதனால் ஜாக்கிசான் தனது மகளின் செயலை கண்டு மனம் நொடிந்துள்ளார்.