இந்தியப் படைகள் வாபஸ் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை - சீனா அறிவிப்பு

டோக்லா பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்தியா, பூடான், சீன எல்லைப் பகுதியில் மூன்று நாடுகள் சந்திக்கும் இடமான சிக்கிம் எல்லை அருகேயுள்ள டோக்லா பகுதியில் சீனத் துருப்புகள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்தியத் துருப்புகள் அதை தடுத்து நிறுத்தின. இதனால் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இந்நிலையில், சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா, 'சீன எல்லையில் இந்திய துருப்புகளை அதிகரித்திருப்பதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை' எனத் தெரிவித்துள்ளது.

மேலும், காஷ்மீரில் லடாக் பகுதியில் இந்தியத் துருப்புகள் 2013, 14ம் ஆண்டுகளில் குவித்ததாகவும் ஜின்குவா கூறியுள்ளது. சமீபக காலங்களில் காஷ்மீர் பிரச்னையை கையில் எடுத்து சீனா பேசி வருவது அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் விரும்பினால் காஷ்மீருக்குள் 3வது நாட்டு ராணும் வரும் என்றும் சீனா சமீபத்தில் கூறியிருந்தது.

More News >>