தொடரும் பெட்ரோல் விலை சரிவு: மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள் !
வரலாறு காணாத உயர்வை சந்தித்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது. தினசரி நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து லிட்டருக்கு 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகினர்.
இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையத் தொடங்கியது. அன்று முதல் படிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகள் குறைந்து இன்று ரூ.76.35க்கு விற்பனையாகிறது. இதேபோல், டீசல் விலையில் 43 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.72.34க்கு விற்பனை செய்யப்படுகிறது.