மேகதாது அணை- திமுக சார்பில் நாளை அனைத்து கட்சிக் கூட்டம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயத்துக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்துக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை வியாழகிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு திமுக தலைமை கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.