நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவை தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், மறுஉத்தரவு வரும் வரை இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய கூடாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாயலத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகள் வழிதடத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்களை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஈடுப்பட்டு வருகிறார். அவர் தொடர்ச்சியாக இதுபோன்ற கட்டடங்களை கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார். ஆகவே, தொடர்ந்து ஒருவரே இப்பணியில் ஈடுபட்டால் தான் இப்பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதால் அவரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.