ஐ.எஸ்.எல்: புனே அணியை வீழ்த்தியது வடகிழக்கு யுனைடெட் அணி!
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் தனது சொந்த மண்ணில் களம் இறங்கிய புனே அணி வடகிழக்கு அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பறிகொடுத்தது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல். தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை உட்பட பத்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் நேற்று புனே அணியும் வடகிழக்கு யுனைடெட்அணியும் களத்தில் மோதியது. போட்டியின் 23வது நிமிடத்தில் பர்தொலமியு ஒரு கோல் அடிக்க வடகிழக்கு யுனைடெட் அணி முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
போட்டியின் கடைசியில் வடகிழக்கு யுனைடெட் அணிக்கு பெனால்டி கிடைத்தது அதை ஜீவான் மாசியா அப்படியே கோலாக மாற்றினார். முடிவில் 2-0 என்ற கணக்கில் வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றிப் பெற்றது. இதனால், புனே அணி தனது 6வது தோல்வியை பதிவு செய்தது.