சப்பாத்தி சமைத்து கொடுத்து மின் ஊழியர்களை சந்தோஷப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் !
புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்தி சமைத்து கொடுத்து அசத்தியுள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. மின்கம்பங்களும், மரங்களும் அடியோடு சாய்ந்தன. இதனால், பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், மின் ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே தங்கியிருந்து மின் விநியோகம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் வழியில் மாத்தூர் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மின்வாரிய ஊழியர்களை சந்தித்து பேசினார். பிறகு, அவர்களுக்கு சப்பாத்தி சமைத்து கொடுத்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதனால், மின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், இன்னும் 3 நாட்களுக்குள் 100 சதவீதம் மின்விநியோகம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாடப்புத்தமும், ராணியார் அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை கேட்டு, மாணவிகளுக்கு சீருடைகளையும் அவர் வழங்கினார்.