சீனாவில் ரசாயன ஆலை தீ விபத்து - 22பேர் பலி
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சான்ங்ஜியாகௌ பகுதியில் இன்று காலை ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 38 லாரிகள் மற்றும் 12 கார்களும் வெடித்து சிதறின என தகவல் வெளியானது.
இந்த தீ விபத்திற்கான காரணத்தை விசாரணை செய்து வருவதாக அங்கிருந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விபத்து நடந்த பகுதிகளில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.