ஏய்.. நான் மட்டக்களப்பு கருணா அம்மான்... ட்விட்டரில் ரணில் கட்சிக்கு ஷாக் மிரட்டல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா, ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சியினருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யார் பிரதமர்? யார் தலைமையில் அரசாங்கம் செயல்படுகிறது? என்பதில் தொடங்கிய குழப்பம் ஓய்ந்தபாடில்லை. ரணில் மற்றும் மகிந்த ராஜபக்சே தரப்பு தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான கருணா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சில ஐக்கிய தேசிய கட்சியினர் என்னை அச்சுறுத்துகின்றனர் என நினைக்கிறேன். என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த பலர் தகவல் அனுப்புகின்றனர்.
நான் மட்டக்களப்பு கருணா அம்மான். 2004-ம் ஆண்டுக்கு முந்தைய கருணா அம்மான் என்றால் யார் என மற்றவர்களிடம் கேளுங்கள்...
இவ்வாறு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.