இறுதிச்சடங்கில் 40 பேர் மட்டுமே பங்கேற்பு நம் காலத்து பாரதியார் ஆனார் ஐராவதம்

கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் மிகச்சிறந்த  தமிழ் ஆராய்ச்சியாளர். மறைந்த அவரின் இறுதிச்சடங்கில் நேற்று 40 பேர் மட்டுமே பங்கேற்றது வியப்பாக உள்ளது. 

தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். சர்வதேச ஆய்வுலகுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோடு தமிழின் தொன்மையை சான்றுகளுடன் அறியச் செய்தவர். தமிழ் தொண்டுக்காக இந்திய ஆட்சிப்பணியை துறந்து வாழ்நாள் முழுவதையும் கழித்தார். 

காடு, மேடு, பாறை, குகை என வெயில், மழை பார்க்காமல் தமிழ் எழுத்துகளைத் தேடிய பெருமகன் இவர். எண்ணற்ற இளைஞர்களை இதழியல் துறையில் இணைத்துக் கொண்டு பணியாற்ற வாய்ப்பளித்தவர்.

ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு எண்ணற்றோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஆனால் அவரது இறுதிச்சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தமே 40 பேர்தான் பங்கேற்றனர்!

பாரதியரின் இறுதிச்சடங்கிலும் வெகு சொற்பமானவர்களே பங்கேற்றனர் என்று சொல்வார்கள். நம் காலத்து பாரதியார் போல ஐரவாதம் மகாதேவனின் இறுதிச்சடங்கில் 40 பேர் மட்டுமே பங்கற்றுள்ளனர். நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் தமிழறிஞர்களுக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான் போலும்!

More News >>