அவமதித்த துரைமுருகன் அருகே அமர்ந்து ஸ்டாலினுடன் வைகோ ஆலோசனை
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார். இதனால் வைகோ குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் இன்று மாலை ஸ்டாலினை வைகோ சந்தித்தார். வைகோவை கைகுலுக்கி ஸ்டாலின் வரவேற்றார். அப்போது வைகோவை அவமதித்த துரைமுருகனையும் ஸ்டாலின் அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பின்னர் துரைமுருகன் அருகே அமர்ந்து ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் துரைமுருகன் முகத்தை உம்மென வேறுபக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.