சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 88 பேருக்கு தண்டனை உறுதி
கடந்த 1984- ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. கலவரத்தில 2.800 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில் யாஷ்பால் சிங் என்பவருக்கு முதன் முறையாகத் தூக்கு தண்டனையும், நரேஷ் ஷெராவட் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 88 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
தண்டனை விதிக்கப்பட்ட 88 பேரில் தற்போது 47 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.