யுவனின் இசையில் டான்ஸ் ஆட வைக்கும் ரவுடி பேபி!
தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ரவுடி பேபி சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது.
மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. 6 மணி நேரத்தில் 9 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர். விரைவில் 1 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் அள்ளப்போகிறது.
மாரி முதல் பாகத்தில் அனிருத்தின் இசையில் வெளியான டானு டானு டான் பாடல் 10 கோடிக்கும் மேல் பார்க்கப்பட்டு ஹிட்டானது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ரவுடி பேபி பாடல் அந்த ரெக்கார்டை பிரேக் செய்யுமா என்பது விரைவில் தெரியவரும்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாரி 2 அடுத்த மாதம் ரிலீசாகிறது.