2.0 படத்துக்கு வில்லனாக வந்து நிற்கும் சர்கார்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரூ. 500 கோடிக்கும் மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் 2.0 படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் தொடங்கியது. ஆனால், நாளைய புக்கிங் கூட காலியாக இருக்கிறது.
மேலும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான புக்கிங் ஓபனாகியும், பல காட்சிகள் இன்னும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை.
சர்கார் படம் டிக்கெட் புக்கிங் ஓபனான சில மணி நேரங்களில் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு பிசினஸ் ஆகாததால், விநியோகஸ்தரர்கள் சன் பிக்ஸர்ஸின் 2.0-வுக்கு மிகப்பெரிய வில்லனாக மாறியுள்ளனர்.
2.0 படம் வசூல் ஆகவில்லை என்றால் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடனே படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் குமார் நடித்துள்ள இந்தியாவின் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள 2.0 படம் பாகுபலி வசூலை முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால், போட்ட முதலான ரூ. 500 கோடியையாவது எடுக்குமா என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.