மும்பையில் பிரபாகரன் பதாகைகளை ஏந்திய நாம் தமிழர் கட்சியினர் கைது
மும்பையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடனான பதாகைகளை ஏந்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபாரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளில் நடைபெற்று வருகின்றன. மும்பையிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது மும்பையின் மெகுல் சர்க்கிள் பகுதியில் முகுந்த் நியூ ஜங்ஷனில் பிரபாகரன் படத்துடனான பதாகைகளை இரு தமிழர்கள் ஏந்தியிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதியழகன் சுந்தரம், பழனிவேல் ரவீந்திரா இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.