மலையாள திரையுலகில் கால் பதிக்கும் விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் கலக்கி வரும் விஜய்சேதுபதி தற்போது, மலையாள திரையுலகிலும் கால்பதிக்கவுள்ளார்.

விஜய்சேதுபதிக்கு 2018ம் ஆண்டு அடுத்தடுத்து பல வெற்றி படங்களாக அமைந்து அவரது இமேஜ் மேலும் உயர்ந்துள்ளது. இதனால், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் பிரம்மாண்ட படமான சைரா – நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கை தொடர்ந்து அடுத்து மலையாள சினிமாவிலும் கால்பதிக்கிறார் விஜய்சேதுபதி. ஒளிப்பதிவாளர் ராஜன் கலத்தில் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தில் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சத்யம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது தனது நடிப்பாற்றலால் கலக்கி வரும் விஜய்சேதுபதி தென்னிந்திய சினிமா முழுவதையும் விரைவில் ஆளப்போகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது.

 

 

 

More News >>